அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களின் கனவு நாயகன் என்பது தெரிந்ததே. அவரது ஒவ்வொரு வார்த்தையும் இன்றைய இளைஞர்களின் வேத வாக்காக இருந்துள்ளது இந்த நிலையில் நாளை அக்டோபர் 15ஆம் தேதி அப்துல்கலாம் அவர்களின் பிறநந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் “நம்மாழ்வார் இயற்கை குழு” சார்பாக ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 45 பனைவிதைகளும் மரக்கன்றுகளையும்
 

அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களின் கனவு நாயகன் என்பது தெரிந்ததே. அவரது ஒவ்வொரு வார்த்தையும் இன்றைய இளைஞர்களின் வேத வாக்காக இருந்துள்ளது

இந்த நிலையில் நாளை அக்டோபர் 15ஆம் தேதி அப்துல்கலாம் அவர்களின் பிறநந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் “நம்மாழ்வார் இயற்கை குழு” சார்பாக ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 45 பனைவிதைகளும் மரக்கன்றுகளையும் அவரது நினைவாக அப்பகுதி விவசாயிகள் நடவு செய்துள்ளனர்.

அதேபோல் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஐந்து வருடங்களாக வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் மாரத்தான் போட்டிகள் நடத்தபப்ட்டு வரும் நிலையில் இந்த ஆண்டும், 11கிமீ மாரத்தான் போட்டி வருகின்ற ஞாயிறு அன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அப்துல்கலாம் அறக்கட்டளையின் சார்பாக 2019 ஆம் ஆண்டின் கனவு மாணவன் என்ற விருது நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவருக்கு வழங்கப்பட்டது. அந்த மாணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web