அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்? புதிய தகவல்!

தமிழக பாஜக தலைவராக இருந்தார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து ஒரு சில மாதங்களாக தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது தமிழக பாஜகவுக்கு புதிய தலைவராக எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், இல கணேசன், எஸ் வி சேகர், கே.டி.ராகவன், உள்பட பலரும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி தமிழக பாஜக தலைவராக முருகானந்தம்
 

அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்? புதிய தகவல்!

தமிழக பாஜக தலைவராக இருந்தார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து ஒரு சில மாதங்களாக தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவராக எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், இல கணேசன், எஸ் வி சேகர், கே.டி.ராகவன், உள்பட பலரும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி தமிழக பாஜக தலைவராக முருகானந்தம் என்பவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கோவையை சேர்ந்த முருகானந்தம் சமீபத்தில் டெல்லிக்கு அமித்ஷாவின் அழைப்பின் பேரில் பயணம் செய்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

முருகானந்தம் பல ஆண்டுகளாக பாஜக உறுப்பினராக இருந்து வருகிறார் என்பதும், பாஜகவின் சார்பில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web