இனி புக் வடிவ பாஸ்போர்ட் கிடையாது: வெறும் சிப் தான்

வரும் காலங்களில் “சிப் வடிவில்” பாஸ்போர்ட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் தெரிவித்துள்ளார். உலகமே டெக்னாலஜிமயமாக மாறி வரும் நிலையில் இதுவரை புக் வடிவில் வழங்கப்பட்டு வரும் பாஸ்போர்ட் விரைவில் சிப் வடிவில் மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள், போலி இணையத்தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், M – Passport முறையால், ஏழு நாட்களில்
 

இனி புக் வடிவ பாஸ்போர்ட் கிடையாது: வெறும் சிப் தான்

வரும் காலங்களில் “சிப் வடிவில்” பாஸ்போர்ட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் தெரிவித்துள்ளார்.

உலகமே டெக்னாலஜிமயமாக மாறி வரும் நிலையில் இதுவரை புக் வடிவில் வழங்கப்பட்டு வரும் பாஸ்போர்ட் விரைவில் சிப் வடிவில் மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள், போலி இணையத்தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், M – Passport முறையால், ஏழு நாட்களில் பாஸ்போர்டு வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர், ஜனவரி முதல் செப்டம்பர் வரை, ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர், பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பாஸ்போர்டிற்கு அதிக அளவில் விண்ணப்பிப்பதாக அருண்பிரசாத் கூறினார்.

From around the web