திரைப்படம் ஆகிறதா கொள்ளையன் முருகனின் கதை!

தமிழகத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துவிட்டால் உடனே அதை திரைப்படம் எடுப்பது கோலிவுட் திரையுலகினர்களின் வழக்கமாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தை வைத்து திரைப்படமாக தயாரிக்க ஒருசில இயக்குனர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட முருகனை குறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவர தொடங்கியதும், பொதுமக்களும் இந்த செய்திகளை ஆர்வமாக பார்ப்பதையும், செய்திச் சேனல்களிலும் மற்றும் இணையதள செய்திகளிலும் இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகியதையும் பார்த்த
 

திரைப்படம் ஆகிறதா கொள்ளையன் முருகனின் கதை!

தமிழகத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துவிட்டால் உடனே அதை திரைப்படம் எடுப்பது கோலிவுட் திரையுலகினர்களின் வழக்கமாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தை வைத்து திரைப்படமாக தயாரிக்க ஒருசில இயக்குனர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது

நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட முருகனை குறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவர தொடங்கியதும், பொதுமக்களும் இந்த செய்திகளை ஆர்வமாக பார்ப்பதையும், செய்திச் சேனல்களிலும் மற்றும் இணையதள செய்திகளிலும் இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகியதையும் பார்த்த கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முருகன் கொள்ளை குறித்த சம்பவத்தை வைத்து திரைக்கதை எழுதி வருகின்றனர்.

முருகனுக்கு ஒருசில நடிகைகளுடன் தொடர்பு உண்டு என்பது இந்த படத்தின் சுவாரசியத்தை அதிகரிக்கும் என்பதும் இந்த சம்பவத்தை திரைப்படம் எடுக்க பலர் முயற்சித்து வருகின்றன்ர. யார் முந்துகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்போம்

From around the web