அஞ்சு பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி: அலைமோதிய கூட்டம்

உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி தருவதாக திண்டுக்கல்லில் உள்ள புகழ்பெற்ற பிரியாணி கடை ஒன்றின் அறிவிப்பால் அந்த கடைமுன் கூட்டம் அலைமோதியது. ஆனால் அதே நேரத்தில் இந்த சலுகை விலை பிரியாணி முதலில் வரும் 100 பேர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டிருந்ததால் கடை திறக்கும் முன்னரே நூற்றுக்கணக்கானோர் கடையின் முன் குவிந்தனர். இந்த சலுகை விலை குறித்து பிரியாணி கடை உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் கூறியபோது, ”உணவின்
 

அஞ்சு பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி: அலைமோதிய கூட்டம்

உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி தருவதாக திண்டுக்கல்லில் உள்ள புகழ்பெற்ற பிரியாணி கடை ஒன்றின் அறிவிப்பால் அந்த கடைமுன் கூட்டம் அலைமோதியது. ஆனால் அதே நேரத்தில் இந்த சலுகை விலை பிரியாணி முதலில் வரும் 100 பேர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டிருந்ததால் கடை திறக்கும் முன்னரே நூற்றுக்கணக்கானோர் கடையின் முன் குவிந்தனர்.

இந்த சலுகை விலை குறித்து பிரியாணி கடை உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் கூறியபோது, ”உணவின் தேவையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் பழமையான பொருட்களின் பெருமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் உலக உணவு தினமான இன்று இந்த சலுகையை வழங்கியதாக அறிவித்தார்.

இந்த பிரியாணியை சரியாக அஞ்சு பைசா கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால் பழைய செல்லாத அஞ்சு பைசா வைத்திருந்தவர்கள் மட்டுமே பிரியாணி வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web