தீபாவளி பட்டாசு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

கடந்த ஆண்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் பொதுமக்கள் இஷ்டம்போல் பட்டாசு வெடித்ததால் பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படியே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், அனுமதி மீறி பட்டாசு வெடிப்போர் மீது, காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று மாசுகட்டுப்பாட்டு
 

தீபாவளி பட்டாசு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

கடந்த ஆண்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் பொதுமக்கள் இஷ்டம்போல் பட்டாசு வெடித்ததால் பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படியே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், அனுமதி மீறி பட்டாசு வெடிப்போர் மீது, காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது

மேலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே எச்சரிக்கையை ஆங்கில புத்தாண்டு உள்பட ஒருசில நாட்களில் பட்டாசு வெடிக்கப்படும்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுக்காதது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.

From around the web