’அசுரன்’ படத்தை ஏன் பார்த்தோம்ன்னு ஸ்டாலினுக்கு இப்ப தோனியிருக்கும்?

தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தை பார்த்த முக ஸ்டாலின் அந்த படத்தில் நடித்த தனுஷுக்கும் இயக்குனர் வெற்றி மாறனுக்கும் பாராட்டு தெரிவித்ததோடு நிறுத்தியிருக்கலாம். தேவையில்லாமல் பஞ்சமி நிலம் குறித்து தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்ய, அந்த கருத்துக்கு டாக்டர் ராமதாஸ் ‘முரசொலி கட்டிடம் கட்டிய இடமே பஞ்சமி இடம்தான் என்று சொல்ல, திடீரென தமிழகமே பரபரப்பாகியுள்ளது அதன்பின் அவசர அவசரமாக முரசொலி கட்டிடத்தின் பட்டாவை தனது டுவிட்டரில் பதிவு செய்து டாக்டர் ராமதாசுக்கு முக
 

’அசுரன்’ படத்தை ஏன் பார்த்தோம்ன்னு ஸ்டாலினுக்கு இப்ப தோனியிருக்கும்?

தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தை பார்த்த முக ஸ்டாலின் அந்த படத்தில் நடித்த தனுஷுக்கும் இயக்குனர் வெற்றி மாறனுக்கும் பாராட்டு தெரிவித்ததோடு நிறுத்தியிருக்கலாம். தேவையில்லாமல் பஞ்சமி நிலம் குறித்து தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்ய, அந்த கருத்துக்கு டாக்டர் ராமதாஸ் ‘முரசொலி கட்டிடம் கட்டிய இடமே பஞ்சமி இடம்தான் என்று சொல்ல, திடீரென தமிழகமே பரபரப்பாகியுள்ளது

அதன்பின் அவசர அவசரமாக முரசொலி கட்டிடத்தின் பட்டாவை தனது டுவிட்டரில் பதிவு செய்து டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்விட்டார். இந்த சவாலுக்கு தற்போது டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

’அசுரன்’ படத்தை ஏன் பார்த்தோம்ன்னு ஸ்டாலினுக்கு இப்ப தோனியிருக்கும்?

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது? நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை!

இந்த விளக்கத்தை பார்க்கும் முக ஸ்டாலின் ’அசுரன்’ படத்தை ஏன் பார்த்தோம்ன்னு தோனியிருக்க வாய்ப்பு இருந்திருக்குமா?

From around the web