தொடர் மழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலைக்கு பின்னரும் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது அதன்படி சற்றுமுன்னர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். இதனால் சிவகெங்கை
 

தொடர் மழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலைக்கு பின்னரும் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது

அதன்படி சற்றுமுன்னர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
என அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். இதனால் சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்பது உறுதியாகிவிட்டது. மற்ற மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து அறிவிப்பு வருகின்றதா? என்படை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளான சைதாப்பேட்டை, அசோக்நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, எழும்பூர், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் மழை நீர் தேங்கியிருப்பதால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்

From around the web