மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால்? முக ஸ்டாலின் மீண்டும் சவால்

முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என டாக்டர் ராமதாஸ் கூறிய விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. இருவரும் மாறி மாறி டுவிட்டரில் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: “முரசொலி” அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ‘அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்’ என்பதை
 

மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால்? முக ஸ்டாலின் மீண்டும் சவால்

முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என டாக்டர் ராமதாஸ் கூறிய விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. இருவரும் மாறி மாறி டுவிட்டரில் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

“முரசொலி” அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ‘அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்’ என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக பதிவு கொடுத்தேன்.

மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால்? முக ஸ்டாலின் மீண்டும் சவால்

அவர் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார்; இதை பஞ்சமி நிலம் என அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அவர் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவரது மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்தேன்.

நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்!

இந்த விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல், இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்.

From around the web