வாக்குப்பதிவு தொடங்கியது: ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்

தமிழகத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியிலும் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கியது இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என ஏற்கனவே தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு மாதிரு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின்னர் சரியாக 7 மணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதி வாக்காளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் காலையிலேயே நீண்ட
 

வாக்குப்பதிவு தொடங்கியது: ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்

தமிழகத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியிலும் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கியது

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என ஏற்கனவே தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு மாதிரு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின்னர் சரியாக 7 மணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதி வாக்காளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் காலையிலேயே நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்கள். நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுகின்றனர்.

From around the web