சென்னையில் இரவிலும் தொடரும் கனமழை: தீபாவளி வியாபாரம் பெரும் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் தீபாவளி வியாபாரம் பெருமளவு பாதிப்பு அடைந்துள்ளது ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகம் காரணமாக தி.நகர் உள்பட முக்கிய பகுதிகளில் வியாபாரம் மந்தமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மழையும் பெய்து வருவதால் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இன்று மாலை முதல் தாம்பரம், குரோம்பேட்டை, விமான நிலையம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், தேனாம்பேட்டை,
 

சென்னையில் இரவிலும் தொடரும் கனமழை: தீபாவளி வியாபாரம் பெரும் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் தீபாவளி வியாபாரம் பெருமளவு பாதிப்பு அடைந்துள்ளது

ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகம் காரணமாக தி.நகர் உள்பட முக்கிய பகுதிகளில் வியாபாரம் மந்தமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மழையும் பெய்து வருவதால் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இன்று மாலை முதல் தாம்பரம், குரோம்பேட்டை, விமான நிலையம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே தீபாவளி வியாபாரம் இருக்கும் என்பதால் இந்த ஆறு நாட்களிலும் மழை பெய்யக்கூடாது என்று வியாபாரிகள் வருணபகவானை வேண்டி வருகின்றனர்,

From around the web