யாருக்கும் பயமில்லை, வெளிநாட்டிற்கும் ஓடவில்லை: கல்கி பகவான் பேட்டி

சமீபத்தில் கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து சுமார் 500 கோடி ரூபாய் அளவில் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் கல்கி பகவான் தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் தப்பிச் சென்றுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து கல்கி ஆசிரமத்திலிருந்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கல்கி அவர்கள் பேசிய போது ’நாங்கள் எந்த நாட்டிற்கும் தப்பி ஓட வில்லை
 

யாருக்கும் பயமில்லை, வெளிநாட்டிற்கும் ஓடவில்லை: கல்கி பகவான் பேட்டி

சமீபத்தில் கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து சுமார் 500 கோடி ரூபாய் அளவில் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் கல்கி பகவான் தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் தப்பிச் சென்றுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து கல்கி ஆசிரமத்திலிருந்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கல்கி அவர்கள் பேசிய போது ’நாங்கள் எந்த நாட்டிற்கும் தப்பி ஓட வில்லை என்றும், நாங்கள் நேமம் ஆசிரமத்தில் தான் தங்கி இருக்கின்றோம் என்றும், இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்

மேலும் நாங்கள் நாட்டை விட்டு ஓடி விட்டதாக பரவலாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் ஆசிரமத்தில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு பக்தர்களுக்கு ஆன்மிகப் பயிற்சியை எப்போதும் போல் அழைத்துக் கொண்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்

நாங்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக அரசோ அல்லது வருமான வரித்துறையினர்களோ கூறவில்லை என்றும் ஊடகங்கள் தான் திட்டமிட்டு இவ்வாறான செய்திகளை பரப்பி வருவதாகவும் கல்கி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

From around the web