புதுவையிலும் தீபாவளிக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை

இந்த ஆண்டு தீபாவளி திருநாள் ஞாயிறு அன்று வருவதை அடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நேற்று தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவித்தது இந்த விடுமுறையை சரிகட்ட நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலைநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவையிலும் தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என அம்மாநில அரசு
 

புதுவையிலும் தீபாவளிக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை

இந்த ஆண்டு தீபாவளி திருநாள் ஞாயிறு அன்று வருவதை அடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நேற்று தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவித்தது

இந்த விடுமுறையை சரிகட்ட நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலைநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவையிலும் தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. எனவே புதுவை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

சனி ஞாயிறு திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த ஆண்டு தீபாவளி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web