நெருங்கி விட்டது தீபாவளி

தீபாவளி வந்து விட்டாலே ஒரு வீட்டில் திருமணமோ, வேறு சுபகாரியங்களோ நடந்தால் எப்படி ஃபீல் பண்ணுவோம் அப்படித்தான் எல்லோரும் ஃபீல் பண்ணுவார்கள். அப்போதைய காலத்தில் சிறு வயதில் தீபாவளி முடிந்ததுமே நாம் அடுத்த வருட தீபாவளி எப்போது என பார்க்க துவங்கி விடுவோம். ஏனென்றால் தீபாவளி வருடத்தில் ஒரு நாள் வந்தாலும் அது பெரிய திருநாளாக அமைந்து விடுகிறது என்பதில் மாற்றமில்லை. உற்றார் உறவினர்கள், நண்பர்களிடம், தீபாவளி டிரஸ்சை போட்டு காட்டி சீன் போடுவது, வீட்டில் என்னடா
 

தீபாவளி வந்து விட்டாலே ஒரு வீட்டில் திருமணமோ, வேறு சுபகாரியங்களோ நடந்தால் எப்படி ஃபீல் பண்ணுவோம் அப்படித்தான் எல்லோரும் ஃபீல் பண்ணுவார்கள்.

நெருங்கி விட்டது தீபாவளி

அப்போதைய காலத்தில் சிறு வயதில் தீபாவளி முடிந்ததுமே நாம் அடுத்த வருட தீபாவளி எப்போது என பார்க்க துவங்கி விடுவோம். ஏனென்றால் தீபாவளி வருடத்தில் ஒரு நாள் வந்தாலும் அது பெரிய திருநாளாக அமைந்து விடுகிறது என்பதில் மாற்றமில்லை.

உற்றார் உறவினர்கள், நண்பர்களிடம், தீபாவளி டிரஸ்சை போட்டு காட்டி சீன் போடுவது, வீட்டில் என்னடா பலகாரம் செய்வார்கள் எனவும் அம்மா எப்போ முறுக்கு சுடுவார்கள் என நம்மை கிறுக்கு பிடிக்க காத்திருக்க வைத்தது அந்த காலங்கள்.

நமக்கு இருக்கிறதோ இல்லையோ தவமாய் தவமிருந்து படத்தில் வரும் ராஜ்கிரண் கதாபாத்திரம் போல தீபாவளிக்கு முதல் நாள் வரை பணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அப்பா, அது தெரியாமல் அப்பா அம்மாவை நச்சரிக்கும் சிறுவர்கள். ஒரு வழியாய் தனக்கு இல்லாவிட்டால் கூட கண்டிப்பாய் மகன்,மகளுக்கு டிரஸ் எடுத்து விட வேண்டும், கண்டிப்பாக நம்ம வீட்டு பிள்ளைகள் புதுத்துணி போடணும், அடுத்த வீட்டு குழந்தைகள் முன்னால நம்ம குழந்தை பழைய டிரஸ்சோட இருக்க கூடாது எப்படியாவது தனது தலையை அடகு வைத்தாவது அப்பா டிரஸ் வாங்கி கொடுத்து விடுவார். இப்படி பாசத்தின் வெளிப்பாடாக கொண்டாடப்படும் பண்டிகைதான் தீபாவளி பண்டிகை.

அந்தக்கால எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், தற்போதைய அஜீத் விஜய் வரை தனது அபிமான ரசிகர்களின் படங்களை திரையில் காண முயற்சிப்பது.

பட்டாசு வாங்கி வீட்டில் சகோதர சகோதரிகள் இருந்தால் அதை சரியான முறையில் பங்கிட்டு கொடுப்பது, தீபாவளிமுதல் நாள் இரவு தூக்கம் வராமல் தவிப்பது, காலையில் 3மணிக்கெல்லாம் எழுந்து பட்டாசு விடுவது. இரவு தீபாவளிக்கு எல்லா வெடியையும் வெடித்து விட்டு கொஞ்சம் வெடியை அப்பா,அம்மா கார்த்திகைக்கு வெடிச்சுக்கலாம் வந்து தூங்கு என சொல்லும்போது அச்சோ தீபாவளி போய் விட்டதே என வரும் கடும் வருத்தம் உள்ளிட்டவைகளை இப்போதும்எண்ணி பார்த்தால் மகிழ்ச்சிதான்.

பிறகு அந்த வருட தீபாவளி மகிழ்ச்சியின் இறுதி அத்தியாயமாய் பள்ளிக்கு தீபாவளி டிரஸை போட்டு செல்வதோடு அந்த தீபாவளி மகிழ்ச்சி முடிவடையும்.

From around the web