சுர்ஜித்தை மீட்க ஓ.என்.ஜி.சி-யின் புதிய முயற்சி: இந்த முயற்சியாவது வெற்றி பெறுமா?

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தையை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு படையினர், தேசிய மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் ஆகியோர் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டே வருவதை அடுத்து தற்போது புதிய முயற்சியாக ஓஎன்ஜிசி ரிக் என்ற இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது
 

சுர்ஜித்தை மீட்க ஓ.என்.ஜி.சி-யின் புதிய முயற்சி: இந்த முயற்சியாவது வெற்றி பெறுமா?

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தையை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு படையினர், தேசிய மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் ஆகியோர் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டே வருவதை அடுத்து தற்போது புதிய முயற்சியாக ஓஎன்ஜிசி ரிக் என்ற இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது

சுர்ஜித்தை மீட்க ஓ.என்.ஜி.சி-யின் புதிய முயற்சி: இந்த முயற்சியாவது வெற்றி பெறுமா?

இந்த சுரங்கம் சுமார் 100 அடி ஆழத்திற்கு அமைக்கப்பட உள்ளதாகவும், அந்த சுரங்கத்தில் இருந்து சுர்ஜித் இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு ஒரு பாதையை ஏற்படுத்தி அந்த பாதை மூலம் சுர்ஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் சுரங்கம் அமைக்க கொண்டுவந்த இயந்திரம் வரும் வழியில் பழுது ஏற்பட்டதால் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது இந்த பணி தொடங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சுர்ஜித் பத்திரமாக மீட்க படுவார் என்றும் தேசிய மீட்பு படையினர் கூறி வருகின்றனர்

அங்கு கூடியிருக்கும் பொதுமக்களும் மிகுந்த நம்பிக்கையுடன் சுர்ஜித்தை உயிருடன் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் அங்கேயே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web