அரசை குறை சொல்ல முடியாது: சுர்ஜித் விவகாரம் குறித்து ரஜினிகாந்த்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த பல மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் இந்த குழந்தை நலமுடன் மீட்கப்பட வேண்டும் என லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது: சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீண்டு வரவேண்டும். சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆழ்துளை கிணறு விவகாரத்தில் பெற்றோர்கள் மற்றும் அரசு
 

அரசை குறை சொல்ல முடியாது: சுர்ஜித் விவகாரம் குறித்து ரஜினிகாந்த்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த பல மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் இந்த குழந்தை நலமுடன் மீட்கப்பட வேண்டும் என லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது: சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீண்டு வரவேண்டும். சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆழ்துளை கிணறு விவகாரத்தில் பெற்றோர்கள் மற்றும் அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குழந்தையை மீட்க அரசு, அதிகாரிகள் விடா முயற்சியுடன் முயற்சிக்கின்றனர்; அதை குறை சொல்ல முடியாது.

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதை பார்த்தோம். அவர் தனது டுவிட்டரில், ‘ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்ல்

From around the web