இன்னும் எத்தனை மணி நேரம் தான் ஆகும்? நீண்டு கொண்டே போகும் சுர்ஜித் மீட்புப்பணி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.0 மணிக்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்ததால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காமல் உள்ளது 60 மணிநேரத்திற்கு மேலாக மீட்புப் பணியினர், தேசிய மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் பலர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் இதுவரை இன்னும் சுர்ஜித் நிலைமை என்னவென்று
 
இன்னும் எத்தனை மணி நேரம் தான் ஆகும்? நீண்டு கொண்டே போகும் சுர்ஜித் மீட்புப்பணி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.0 மணிக்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்ததால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காமல் உள்ளது

இன்னும் எத்தனை மணி நேரம் தான் ஆகும்? நீண்டு கொண்டே போகும் சுர்ஜித் மீட்புப்பணி

60 மணிநேரத்திற்கு மேலாக மீட்புப் பணியினர், தேசிய மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் பலர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் இதுவரை இன்னும் சுர்ஜித் நிலைமை என்னவென்று தெரியவில்லை. 60 மணி நேரமாக ஆழ்துளையில் உணவு தண்ணீர் என்று இருக்கும் சிறுவனின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இன்னும் எத்தனை மணி நேரம் தான் ஆகும்? நீண்டு கொண்டே போகும் சுர்ஜித் மீட்புப்பணி

இந்த நிலையில் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த போதிலும் அந்த முயற்சிகள் குழந்தையை காப்பாற்ற முடியாத அளவுக்கு இருப்பது நம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்பது உண்மை. கண்டம் விட்டு கண்டம் பாயும் அளவுக்கு ஆயுதங்கள் கண்டுபிடித்த இந்தியாவால், நிலவிற்கு செயற்கைக்கோளை அனுப்பும் திறன் உள்ள விஞ்ஞானிகள் கொண்ட இந்தியாவால், ஒரு 100 அடி ஆழத்தில் உள்ள ஒரு குழந்தையை மீட்க முடியவில்லை என்றால் உண்மையில் நாம் விஞ்ஞானத்தில் முன்னேறி உள்ளோமா? என்று கேள்வி எழுகிறது

இன்னும் எத்தனை மணி நேரம் தான் ஆகும்? நீண்டு கொண்டே போகும் சுர்ஜித் மீட்புப்பணி

ஒரு நாட்டையே அரை மணி நேரத்தில் அழித்துவிடக் கூடிய அளவுக்கு ஆயுதங்களை கண்டுபிடித்த மனிதனால் ஒரு குழிக்குள் விழுந்து ஆக்கபூர்வமாக ஒரு உயிரைக் காப்பாற்றக்கூடிய ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது

இன்னும் எத்தனை மணி நேரம் தான் ஆகும்? நீண்டு கொண்டே போகும் சுர்ஜித் மீட்புப்பணி

குழந்தை முதலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பொழுது 10 ஆழத்தில் தான் இருந்தது. அப்பொழுதே சுதாரித்து அந்த குழந்தையை வெளியே எளிதில் எடுத்திருக்கலாம். குழந்தை 100 அடிக்கு மேல் சென்ற பிறகுதான் குழந்தை அதற்கு மேலும் கீழே விழாமல் இருக்க ஏர்லாக் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏன் அதை 10 அடியில் இருக்கும் போதே செய்யவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது

இன்னும் எத்தனை மணி நேரம் தான் ஆகும்? நீண்டு கொண்டே போகும் சுர்ஜித் மீட்புப்பணி

மேலும் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டிவிட்டு கொஞ்சம் கூட பொறுப்பின்றி மூடாமல் வைத்திருக்கும் வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே வருகிறது. சமூகப் பொறுப்பின்றி இவ்வாறு செய்யும் நபர்களுக்கு அரசு இதுவரை என்ன தண்டனை கொடுத்துள்ளது? என்ன சட்டத்திருத்தம் செய்து உள்ளது? என்பதே கேள்விக்குறியாக உள்ளது

இன்னும் எத்தனை மணி நேரம் தான் ஆகும்? நீண்டு கொண்டே போகும் சுர்ஜித் மீட்புப்பணி

இவ்வாறு குழந்தைகள் துளை கிணற்றில் விழும் போது மட்டும் இரண்டு மூன்று நாட்கள் பரபரப்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி, அதன் பின்னர் அந்த விஷயத்தை மறந்து விட்டு அடுத்த விஷயத்துக்கு நாம் கடந்து விடுகிறோம். இப்படியேதான் ஒவ்வொரு முறையும் குழந்தை கீழே விழும்போது நடந்து கொண்டிருக்கின்றது

இன்னும் எத்தனை மணி நேரம் தான் ஆகும்? நீண்டு கொண்டே போகும் சுர்ஜித் மீட்புப்பணி

இனிமேலாவது ஒரு குழந்தைகூட ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரை விடாத அளவிற்கு அரசு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்பது ரொம்ப முக்கியமானது. அதைவிட முக்கியம் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்பு என்னவெனில் ஆழ்துளை கிணறு தோண்டி அதில் தண்ணீர் வரவில்லை என்றால் அதிலுள்ள பைப்புகளை உருவிவிட்டு அதை அப்படியே விடும் நபர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்

இன்னும் எத்தனை மணி நேரம் தான் ஆகும்? நீண்டு கொண்டே போகும் சுர்ஜித் மீட்புப்பணி

இது குறித்து அரசு தனியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். குழந்தைகளை பாதுகாக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்? எவ்வளவு பெரிய சாதனைகள் செய்தாலும் குழந்தையை பாதுகாக்க முடியாத ஒரு அரசை நல்ல அரசு என்று கூற முடியாது. இனிமேலாவது அரசு சுதாரிகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web