பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து: ஜவுளிக்கடைக்கும் பரவியதால் பரபரப்பு

சிவகங்கை அருகே பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சிவகங்கை அருகே காளையார்கோயில் பேருந்து நிலையத்தில் சுந்தரம் என்பவர் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிகமாக பட்டாசு கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அவரது கடைக்கு எதிரே பட்டாசு வெடித்தபோது, தீப்பொறி பறந்து பட்டாசு கடையின் மீது விழுந்தது. அப்போது கடையில் இருந்த பட்டாசுகள்
 

பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து: ஜவுளிக்கடைக்கும் பரவியதால் பரபரப்பு

சிவகங்கை அருகே பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிவகங்கை அருகே காளையார்கோயில் பேருந்து நிலையத்தில் சுந்தரம் என்பவர் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிகமாக பட்டாசு கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அவரது கடைக்கு எதிரே பட்டாசு வெடித்தபோது, தீப்பொறி பறந்து பட்டாசு கடையின் மீது விழுந்தது.

அப்போது கடையில் இருந்த பட்டாசுகள் படபடவென வெடிக்கத் தொடங்கின. கடையிலிருந்து பட்டாசுகள் அனைத்துக்கும் தீ பரவிய நிலையில், முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.

அதுமட்டுமின்றி பட்டாசு கடையில் பற்றிய தீ அருகிலிருந்த ஜவுளி கடைக்கும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம் ஆகும்

From around the web