மூடாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள்: கமல்ஹாசன் யோசனை

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை நேற்று முன்தினம் மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததை அடுத்து அந்த குழந்தையை உயிருடன் மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் போராடி வருகின்றனர் தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 110 அடி ஆழத்தில் தோண்டப்படும் இந்த சுரங்கத்தில் 3 தீயணைப்பு வீரர்கள்
 

மூடாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள்: கமல்ஹாசன் யோசனை

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை நேற்று முன்தினம் மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததை அடுத்து அந்த குழந்தையை உயிருடன் மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் போராடி வருகின்றனர்

தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 110 அடி ஆழத்தில் தோண்டப்படும் இந்த சுரங்கத்தில் 3 தீயணைப்பு வீரர்கள் இறங்கி அந்த குழந்தையை மீட்க உள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்று சுர்ஜித் உயிருடன் திரும்பி வருவான் என அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்

இந்த நிலையில் இதுபோன்ற ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருப்பதை கண்டித்து பல பிரபலங்கள் கூறிவருவதை அடுத்து தற்போது கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

From around the web