இதுதான் மீட்புப்பணியின் லட்சணமா? நெட்டிசன்கள் விளாசல்!

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த 65 மணி நேரமாக மீட்பு பணிகளை போராடி வரும் நிலையில் மீட்பு பணியினர் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்காததால் குழந்தையை இன்னும் வெளியே எடுக்க முடியாத நிலை உள்ளது ஆழ்துளை அருகே சுரங்கம் தோண்ட கொண்டுவரப்பட்ட இயந்திரமும் தற்போது வேலை செய்யவில்லை என்பதால் அடுத்த கட்டமாக போர்வெல் மிஷின் வைத்து மூன்று இடங்களில் துளைபோட்டு சுரங்கம் அமைக்க முடிவு
 

இதுதான் மீட்புப்பணியின் லட்சணமா? நெட்டிசன்கள் விளாசல்!

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த 65 மணி நேரமாக மீட்பு பணிகளை போராடி வரும் நிலையில் மீட்பு பணியினர் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்காததால் குழந்தையை இன்னும் வெளியே எடுக்க முடியாத நிலை உள்ளது

ஆழ்துளை அருகே சுரங்கம் தோண்ட கொண்டுவரப்பட்ட இயந்திரமும் தற்போது வேலை செய்யவில்லை என்பதால் அடுத்த கட்டமாக போர்வெல் மிஷின் வைத்து மூன்று இடங்களில் துளைபோட்டு சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளனர்

இதுதான் மீட்புப்பணியின் லட்சணமா? நெட்டிசன்கள் விளாசல்!

இந்த நிலையில் இந்த ஐடியாவை முதலிலேயே செயல்படுத்தி இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

குழந்தை தவறி விழுவது தமிழகத்தில் இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் இதே போன்ற சம்பவங்கள் பல நடந்து உள்ள நிலையில் அப்போதே ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது மீட்புக் குழுவினருக்கு தெரியாதா? முன்கூட்டியே யோசித்து வைத்திருக்க மாட்டார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்

இதுதான் மீட்புப்பணியின் லட்சணமா? நெட்டிசன்கள் விளாசல்!

மேலும் குழந்தை 26 அடியில் இருக்கும்போதே அதை ஏர்லாக் செய்து நிறுத்தி வைக்காமல் தற்போது 80 அடிக்கும் அடிக்கு சென்றபிறகு ஏர்லாக் செய்து நிறுத்தி வைத்திருப்பது ஏன்? அதை முதலிலேயே 26 அடியிலிருந்தபோதே செய்திருக்கலாமே என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

அதுமட்டுமின்றி குழந்தை தவறி விழுந்த போர்வெல்லின் ஆழம் 400 அடி. ஒரு தனியாரால் 400 அடி போர்வெல் போட முடிகிறது என்றால் ஒரு அரசால் நவீன இயந்திரங்களை வைத்து 100 அடி குழியை போடமுடியாதா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்

இதுதான் மீட்புப்பணியின் லட்சணமா? நெட்டிசன்கள் விளாசல்!

ஆனால் கேள்வி கேட்பது மிகவும் சுலபம். ஆபத்தான நிலையில் குழந்தை இருக்கும்போது அந்த குழந்தைக்கு மேலும் ஆபத்து ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரி நேரத்தில் ஒருசில ரிஸ்க் எடுக்க முடியாது என்பதுதான் உண்மை. கேள்வி கேட்கும் நெட்டிசன்கள் குழந்தையை மீட்பதற்காக என்ன செய்தார்கள்? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது

From around the web