செங்கல்பட்டு-சென்னை மின்சார ரயில்கள் திடீர் நிறுத்தம்: பயணிகள் அவதி

சென்னையின் முக்கிய போக்குவரத்து வசதிகளில் ஒன்று மின்சார ரயில்கள். தினமும் லட்சக்கணக்கானோர் இந்த ரயிலை நம்பித்தான் உள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு இந்த மின்சார ரயில்கள் தான் மிகவும் உதவிகரமாக உள்ளது இந்த நிலையில் இன்று காலையில் இருந்து செங்கல்பட்டிலிருந்து சென்னை மார்கமாக செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக கடந்த ஒரு மணி நேரமாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள்
 

செங்கல்பட்டு-சென்னை மின்சார ரயில்கள் திடீர் நிறுத்தம்: பயணிகள் அவதி

சென்னையின் முக்கிய போக்குவரத்து வசதிகளில் ஒன்று மின்சார ரயில்கள். தினமும் லட்சக்கணக்கானோர் இந்த ரயிலை நம்பித்தான் உள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு இந்த மின்சார ரயில்கள் தான் மிகவும் உதவிகரமாக உள்ளது

இந்த நிலையில் இன்று காலையில் இருந்து செங்கல்பட்டிலிருந்து சென்னை மார்கமாக செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக கடந்த ஒரு மணி நேரமாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அலுவலக நேரம் என்பதால் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் ரயிலில் இருந்து இறங்கி பேருந்து மற்றும் ஆட்டோக்களில் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

From around the web