சுஜித் கல்லறையில் அஞ்சலி செலுத்திய முக ஸ்டாலின்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து மண்ணால் மூடப்பட்டு உயிரிழந்த சிறுவன் சுஜித் இன்று மீண்டும் மண்ணுக்குள் சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டார். சிறுவன் சுஜித்தின் இழப்பு பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் யாரும் ஆழ்துளை கிணறு தோண்டினால் அதனை மூடாமல் வைக்க மாட்டார்கள் என்று நம்புவோம். இந்த நிலையில் சிறுவன் சுஜித்தின் கல்லறையில் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் சற்றுமுன் திமுக தலைவர் முக ஸ்டாலின் நடுக்காட்டுப்பட்டி பாத்திமாபுதூரில் உள்ள சுஜித்தின் கல்லறைக்கு வந்து அஞ்சலி
 

சுஜித் கல்லறையில் அஞ்சலி செலுத்திய முக ஸ்டாலின்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து மண்ணால் மூடப்பட்டு உயிரிழந்த சிறுவன் சுஜித் இன்று மீண்டும் மண்ணுக்குள் சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டார்.

சிறுவன் சுஜித்தின் இழப்பு பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் யாரும் ஆழ்துளை கிணறு தோண்டினால் அதனை மூடாமல் வைக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.

இந்த நிலையில் சிறுவன் சுஜித்தின் கல்லறையில் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் சற்றுமுன் திமுக தலைவர் முக ஸ்டாலின் நடுக்காட்டுப்பட்டி பாத்திமாபுதூ​ரில் உள்ள சுஜித்தின் கல்லறைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்

ஏற்கனவே அவர் சுஜித்தின் மறைவு குறித்து, ‘நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான் என்றும், சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான் என்றும், ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web