உறுதியானது கியார் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

லட்சத்தீவுகள், மாலத்தீவுகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்தை நோக்கி கியார் புயல் நகரவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை
 

உறுதியானது கியார் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

லட்சத்தீவுகள், மாலத்தீவுகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்தை நோக்கி கியார் புயல் நகரவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னை எழும்பூர், மெரீனா, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை மட்டுமின்றி கும்பகோணம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web