போதை இளைஞர்களால் ஆற்றில் வீசப்பட்ட மாணவர் உடல் மீட்பு!

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் ஜீவித் என்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர் தனது காதலியுடன் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென அங்கு வந்த போதை இளைஞர்கள் சிலர் ஜீவித்தையும் அவரது காதலியையும் பயமுறுத்தினர். இந்த பயமுறுத்தல் காரணமாக நிலைகுலைந்த ஜீவித் கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்தார். இந்த நிலையில் ஆற்றில் விழுந்த ஜீவித் என்ற மாணவரை தேடி கண்டுபிடிக்க மீட்பு படையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். நீச்சல் வீரர்களும் ஆற்றில் இறங்கி ஜீவித் நிலை
 

போதை இளைஞர்களால் ஆற்றில் வீசப்பட்ட மாணவர் உடல் மீட்பு!

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் ஜீவித் என்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர் தனது காதலியுடன் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென அங்கு வந்த போதை இளைஞர்கள் சிலர் ஜீவித்தையும் அவரது காதலியையும் பயமுறுத்தினர்.

இந்த பயமுறுத்தல் காரணமாக நிலைகுலைந்த ஜீவித் கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்தார். இந்த நிலையில் ஆற்றில் விழுந்த ஜீவித் என்ற மாணவரை தேடி கண்டுபிடிக்க மீட்பு படையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். நீச்சல் வீரர்களும் ஆற்றில் இறங்கி ஜீவித் நிலை என்ன என்பது குறித்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஜீவித் உடல் கொள்ளிடம் கல்லணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் காதலர்களை பயமுறுத்தியதாக சாதாரண பிரிவில் போதை இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இனி அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
பாதுகாப்பில்லாத இடங்களில் காதலர்கள் தனிமையில் சந்திப்பது விபரீதத்தில் தான் முடியும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகிறது. இதனை அடுத்து இனியாவது காதலர்கள் பாதுகாப்பு இல்லாத தனிமையான இடத்தில் சந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது

From around the web