அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்: தமிழகத்திற்கு கனமழையா?

அரபிக்கடலில் ஏற்கனவே க்யார் என்ற புயல் உருவாகி கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தற்போது லட்சத்தீவு பகுதியில் மேலும் ஒரு புயல் நிலைகொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ’மஹா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய புயல் நாளை தீவிர புயலாக மாறும் எனவும் லட்சத்தீவில் இருந்து 25 கி.மீ வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மஹா புயலால் காற்றின் வேகம் 95 கி.மீட்டரில் இருந்து 110 கி.மீட்டராக இருக்கும் என்பதால்
 

அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்: தமிழகத்திற்கு கனமழையா?

அரபிக்கடலில் ஏற்கனவே க்யார் என்ற புயல் உருவாகி கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தற்போது லட்சத்தீவு பகுதியில் மேலும் ஒரு புயல் நிலைகொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ’மஹா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய புயல் நாளை தீவிர புயலாக மாறும் எனவும் லட்சத்தீவில் இருந்து 25 கி.மீ வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மஹா புயலால் காற்றின் வேகம் 95 கி.மீட்டரில் இருந்து 110 கி.மீட்டராக இருக்கும் என்பதால் மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரபிக்கடலில் க்யார் புயல் உருவாகியுள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக மஹா புயல் உருவாகியுள்ளதால் திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது மஹா புயல் திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீட்டர் தூரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

From around the web