நாளைமுதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம்: மருத்துவர்கள் அறிவிப்பால் பரபரப்பு!

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறது நேற்று மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று ஒரு சில மருத்துவர்கள் பணிக்கு திரும்புவதாகவும் தற்போது அரசு அங்கீகாரம் பெறாத சங்கங்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு
 

நாளைமுதல் பிரேத பரிசோதனை  செய்ய மாட்டோம்: மருத்துவர்கள் அறிவிப்பால் பரபரப்பு!

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறது

நேற்று மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று ஒரு சில மருத்துவர்கள் பணிக்கு திரும்புவதாகவும் தற்போது அரசு அங்கீகாரம் பெறாத சங்கங்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் திருச்சி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் நாளை முதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதேபோன்ற அறிவிப்பை மற்ற நகரில் போராட்டம் செய்யும் மருத்துவர்கள் அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

From around the web