தாலி கட்டிய மறுநிமிடம் மாப்பிள்ளை கன்னத்தில் ஓங்கி அறைந்த மணமகள்: பெரும் பரபரப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் தாலி கட்டின அடுத்த நிமிடமே மாப்பிள்ளை கன்னத்தில் ஓங்கி அறைந்த மணப்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த விஜி என்ற கூலித் தொழிலாளிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு இரு வீட்டார்களின் உறவினர்கள் திருமண மண்டபத்தில் குவிந்து மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் மணமகளுக்கு தாலி கட்டிய விஜி அதன்பின்னர் அவருடைய நெற்றியில் குங்குமப்பொட்டு வைக்க
 

தாலி கட்டிய மறுநிமிடம் மாப்பிள்ளை கன்னத்தில் ஓங்கி அறைந்த மணமகள்: பெரும் பரபரப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் தாலி கட்டின அடுத்த நிமிடமே மாப்பிள்ளை கன்னத்தில் ஓங்கி அறைந்த மணப்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த விஜி என்ற கூலித் தொழிலாளிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு இரு வீட்டார்களின் உறவினர்கள் திருமண மண்டபத்தில் குவிந்து மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில் மணமகளுக்கு தாலி கட்டிய விஜி அதன்பின்னர் அவருடைய நெற்றியில் குங்குமப்பொட்டு வைக்க முயன்றார். அப்போது பொட்டு வைக்க வந்த மாப்பிள்ளையின் கையை தட்டிவிட்டு அவருடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார் மணப்பெண். இதனால் மாப்பிள்ளையும் அவருடைய உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மாப்பிள்ளையை ஓங்கி அறைந்த மணமகள் மறுநிமிடம் தாலியை கழட்டி தூக்கி எறிந்துவிட்டு மணமேடையில் இருந்து வெளியேறினார். இதனால் மாப்பிள்ளை வீட்டார் மட்டுமின்றி மணமகள் வீட்டார்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது மணமகள் மனநல பாதிப்புடன் இருந்ததாகவும், அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து அதே மணமேடையில் விஜிக்கு வேறொரு பெண்ணை அவருடைய உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

From around the web