வாகன சோதனையின்போது விபத்து: வீடு திரும்பியபின் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

சென்னையில் வாகன சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ஒரு இளம்பெண் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை செங்குன்றத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பிரியதர்ஷினி. இவர் சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, போலீசார் வாகன சோதனைக்காக அவரை நிறுத்தினர். ர் அப்போது அவர் நிலை தடுமாறி விழுந்தபோது பின்னால் வந்த லாரி அவரது வாகனத்தின் மீது மோதியதால்
 

வாகன சோதனையின்போது விபத்து: வீடு திரும்பியபின் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

சென்னையில் வாகன சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ஒரு இளம்பெண் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பிரியதர்ஷினி. இவர் சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, போலீசார் வாகன சோதனைக்காக அவரை நிறுத்தினர். ர் அப்போது அவர் நிலை தடுமாறி விழுந்தபோது பின்னால் வந்த லாரி அவரது வாகனத்தின் மீது மோதியதால் பிரியதர்ஷினிக்கு காலில் காயம் ஏற்பட்டது

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பெற்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இருப்பினும் அவரது காலில் அதிக வலி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் மற்றும் கால் வலியால் அவதிப்பட்ட அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது

From around the web