தமிழ்ப்பட ஹீரோ தலைமறைவு: போலீசார் வலைவீச்சு

தமிழ்ப்படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் கைதாகாமல் இருக்க தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பிடிக்க போலீசார் வலைவீசியுள்ளனர். நம்ம கத’ என்ற திரைப்படத்தில் நடித்து வருபவர் நடிகர் கவித்ரன். இந்த படத்தை இவரது தந்தை எஸ்.எஸ்.கண்ணன் இயக்குகிறார். இந்த நிலையில் கவித்ரன் மற்றும் அவரது தந்தை எஸ்.எஸ்.கண்ணன் ஆகிய இருவர் மீதும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து இருவரும் தலைமறைவாக உள்ளனர். போலீசார் எங்களை பிடித்தால் கை,
 

தமிழ்ப்பட ஹீரோ தலைமறைவு: போலீசார் வலைவீச்சு

தமிழ்ப்படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் கைதாகாமல் இருக்க தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பிடிக்க போலீசார் வலைவீசியுள்ளனர்.

நம்ம கத’ என்ற திரைப்படத்தில் நடித்து வருபவர் நடிகர் கவித்ரன். இந்த படத்தை இவரது தந்தை எஸ்.எஸ்.கண்ணன் இயக்குகிறார். இந்த நிலையில் கவித்ரன் மற்றும் அவரது தந்தை எஸ்.எஸ்.கண்ணன் ஆகிய இருவர் மீதும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து இருவரும் தலைமறைவாக உள்ளனர். போலீசார் எங்களை பிடித்தால் கை, கால்களை முறித்து மாவுக் கட்டு போட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் தலைமறைவாக உள்ளதாக கவித்ரன் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

கல்லூரி மாணவர்களிடம் சினிமா சான்ஸ் தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக ஏற்கனவே எஸ்.எஸ். கண்ணன், நடிகர் கவித்ரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் எஸ்.எஸ். கண்ணன், கவித்ரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web