என் பாடை எரிவதை என் கண்ணால் பார்த்தேன். தமிழக அமைச்சர்

கடந்த சில வாரங்களாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மிசா சட்டத்தில் கைதாகவில்லை என்றும் மிசா நேரத்தில் வேறொரு வழக்கில் கைதானவர் என்றும் ஒரு சர்ச்சை கிளப்ப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுகவினர் கிண்டலடித்து பதிவுகள் செய்வதும் அதற்கு திமுகவினர் பதில் அளிப்பதுமாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள், முக ஸ்டாலின் மிசா கைது பற்றி ஒரு சர்ச்சைக்குரிய
 

என் பாடை எரிவதை என் கண்ணால் பார்த்தேன். தமிழக அமைச்சர்

கடந்த சில வாரங்களாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மிசா சட்டத்தில் கைதாகவில்லை என்றும் மிசா நேரத்தில் வேறொரு வழக்கில் கைதானவர் என்றும் ஒரு சர்ச்சை கிளப்ப்பட்டு வருகிறது.

இதற்கு அதிமுகவினர் கிண்டலடித்து பதிவுகள் செய்வதும் அதற்கு திமுகவினர் பதில் அளிப்பதுமாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது

இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள்,
முக ஸ்டாலின் மிசா கைது பற்றி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்

அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சென்னையில் உள்ள மாபா பாண்டியராஜன் அவர்களின் அண்ணாநகர் வீட்டிற்கு எதிரில் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சரின் உருவப்படத்தை எரித்து தீக்கிரையாக்கிய சம்பவமும் நடைபெற்றது இது குறித்து அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள் தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே!
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!
முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன் !
இனம்புரியாத தெளிவு

என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web