’வெற்றிடம்’ கருத்தை விமர்சனம் செய்த அதிமுக-திமுகவுக்கு ரஜினி பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தமிழகத்தில் இன்னும் ஆளுமையுள்ள தலைவருக்கு வெற்றிடம் உள்ளது’ என்று கூறியிருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மறைமுகமாகவும், திமுக பொருளாளர் துரைமுருகன் நேரடியாகவும் பதிலளித்து இருந்தனர். மேலும் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று பெங்களூருவில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் சென்றபோது விமான நிலையத்தில் செய்தியாளர்கள்
 

’வெற்றிடம்’ கருத்தை விமர்சனம் செய்த அதிமுக-திமுகவுக்கு ரஜினி பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தமிழகத்தில் இன்னும் ஆளுமையுள்ள தலைவருக்கு வெற்றிடம் உள்ளது’ என்று கூறியிருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மறைமுகமாகவும், திமுக பொருளாளர் துரைமுருகன் நேரடியாகவும் பதிலளித்து இருந்தனர்.

மேலும் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று பெங்களூருவில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் சென்றபோது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் ‘வெற்றிடம்’ குறித்து அதிமுக, திமுக தெரிவித்த கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ’வெற்றிடம் இருக்கிறது என்ற கருத்துக்கு திமுக, அதிமுக கருத்து பற்றி தான் கருத்து கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

From around the web