பூஜை செய்ய வந்த பெண்ணை தாக்கிய அர்ச்சகருக்கு அபராதம்-தடை!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண் ஒருவர் அந்த கோவிலின் தீட்சிதர் தாக்கிய வீடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தற்போது அந்த தீட்சதருக்கு 2 மாதம் பூஜை செய்ய தடையும், ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது மந்திரம் சொல்லி பூஜை செய்ய பெண் ஒருவர் கூறியதால் ஆத்திரம் அடைந்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர், அந்த பெண்ணை அவதூறாக பேசியது மட்டுமின்றி கன்னத்தில் அடித்ததாகவும் வீடியோவில் பதிவு
 
பூஜை செய்ய வந்த பெண்ணை தாக்கிய அர்ச்சகருக்கு அபராதம்-தடை!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண் ஒருவர் அந்த கோவிலின் தீட்சிதர் தாக்கிய வீடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தற்போது அந்த தீட்சதருக்கு 2 மாதம் பூஜை செய்ய தடையும், ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மந்திரம் சொல்லி பூஜை செய்ய பெண் ஒருவர் கூறியதால் ஆத்திரம் அடைந்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர், அந்த பெண்ணை அவதூறாக பேசியது மட்டுமின்றி கன்னத்தில் அடித்ததாகவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீட்சதர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட தீட்சதர் தலைமறைவானார். அவரை போலீசார் தேட்டிவருகின்றனர். இந்த நிலையில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தர்ஷன் திருக்கோவில் பணியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டதோடு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து பொது தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள தீட்சதர் தர்ஷனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் தீட்சிதர் தர்ஷன் கைது செய்யப்படுவார் என சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

From around the web