புனித தலங்களை மதிக்க தெரியாதவர்களுக்கு கோவிலில் நுழையும் உரிமை எதற்கு? நடிகை கஸ்தூரி

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியபோது இந்து கோவில்கள் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார். இதற்கு அவரது கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்களே கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல என்றும், தன்னை இந்துக்களுக்கு விரோதி போல் சிலர் காட்ட முயற்சிப்பதாகவும் திருமாவளவன் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய பேச்சுக்காக அவர் வருத்தமும் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த
 

புனித தலங்களை மதிக்க தெரியாதவர்களுக்கு கோவிலில் நுழையும் உரிமை எதற்கு? நடிகை கஸ்தூரி

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியபோது இந்து கோவில்கள் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார். இதற்கு அவரது கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்களே கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல என்றும், தன்னை இந்துக்களுக்கு விரோதி போல் சிலர் காட்ட முயற்சிப்பதாகவும் திருமாவளவன் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய பேச்சுக்காக அவர் வருத்தமும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக்கில் கூறியதாவது:
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக்கில், ‘குழந்தையின் கிறுக்கல்களை கூட பார்த்து, கண்விரித்து கைதட்டி கலையென்று மகிழ்வதுதான் மனித இயல்பு. பிடித்து வைத்த மஞ்சளிலும் பிள்ளையாரை பார்ப்பது நம்பிக்கை. கோவில் சிலையில் கலைநயத்தை உணர நம்பிக்கை தேவையில்லை, கண்பார்வை இருந்தால் போதும். கம்யூனிஸ்ட் நாத்திக சீன அதிபருக்கு கூட ரசிக்க தெரிந்தது, இங்கு வன்மம் புடிச்ச சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை. புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு? சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும்- அது அவரின் பிறப்பினால அல்ல, அவரின் பிறவிக்குணத்தால்.. என்று கூறியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரிக்கு நெட்டிசன்களிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றது

குழந்தையின் கிறுக்கல்களை கூட பார்த்து, கண்விரித்து கைதட்டி கலையென்று மகிழ்வதுதான் மனித இயல்பு. பிடித்து வைத்த மஞ்சளிலும்…

Kasthuri ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ  ಶುಕ್ರವಾರ, ನವೆಂಬರ್ 15, 2019

From around the web