திருமாவளவனின் கோரிக்கையால் உதயநிதிக்கு பாதிப்பு வருமா?

தமிழக முதல்வரை நேற்று திருமாவளவன் சந்தித்து எழுப்பிய கோரிக்கை ஒன்றால் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவரது க்ரீன்வேஸ் சாலை இல்லத்தில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் ’சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டு
 

திருமாவளவனின் கோரிக்கையால் உதயநிதிக்கு பாதிப்பு வருமா?

தமிழக முதல்வரை நேற்று திருமாவளவன் சந்தித்து எழுப்பிய கோரிக்கை ஒன்றால் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவரது க்ரீன்வேஸ் சாலை இல்லத்தில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் ’சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டு வரும் நிலையில் திருமாவளவனின் இந்த கோரிக்கை திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் திமுகவின் சார்ப்பில் உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் வேட்பாளராக போட்டியிட முடியாது என்பது திருமாவளவனுக்கு தெரியாதா? என்றும் உதயநிதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திருமாவளவனின் இந்த கோரிக்கை இருப்பதாகவும் கூறப்படுகிறது

சென்னை மாநகராட்சியை தனித்தொகுதி அல்லது பெண்களுக்கான தொகுதியாக மாற்ற தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web