மாணவிகளின் செல்போன் புகைப்படங்களை திருடி மிரட்டிய பேராசிரியர்: பெரும் பரபரப்பு

கல்லூரி மாணவிகளின் செல்போன்களில் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் திருடிய பேராசிரியர் ஒருவர் மாணவிகளை மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிலவியல் துறை பேராசிரியராக இருக்கும் ஒருவர், 13 மாணவிகள் செல்போன்களை வாங்கியுள்ளார். அதன் பின்னர் அந்த செல்போன்களில் உள்ள புகைப்படங்கள், ஆண் நண்பர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள், வாட்ஸ்ஆப் சாட்கள், மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை தனது பென் டிரைவரில் பதிவு செய்து வைத்து கொண்டாராம். அதன் பின்னர் இதனை
 

மாணவிகளின் செல்போன் புகைப்படங்களை திருடி மிரட்டிய பேராசிரியர்: பெரும் பரபரப்பு

கல்லூரி மாணவிகளின் செல்போன்களில் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் திருடிய பேராசிரியர் ஒருவர் மாணவிகளை மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிலவியல் துறை பேராசிரியராக இருக்கும் ஒருவர், 13 மாணவிகள் செல்போன்களை வாங்கியுள்ளார். அதன் பின்னர் அந்த செல்போன்களில் உள்ள புகைப்படங்கள், ஆண் நண்பர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள், வாட்ஸ்ஆப் சாட்கள், மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை தனது பென் டிரைவரில் பதிவு செய்து வைத்து கொண்டாராம். அதன் பின்னர் இதனை வைத்து அந்த மாணவிகளை மிரட்டியதாகவும், ஆண் நண்பர்களுடன் பழகுவது குறித்து அவர் தவறாக பேசியதாகவும் கூறப்படுகிறது

மேலும் ஒருசில பெற்றோர்களிடம் அந்த புகைப்படங்களை பேராசிரியர் காட்டியதாகவும் தெரிகிறது. இதனால் தங்களுடைய புகைப்படங்களும் தங்களுடைய பெற்றோர்களுக்கும் காட்டப்படும் என்ற பயத்தில் மாணவிகள் இருந்த நிலையில் ஒரு மாணவி தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

18 வயதுக்கு மேல் ஆகும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை அவர்களது பெற்றோரே அவர்களது அனுமதி இல்லாமல் பார்ப்பது தவறு என்ற நிலையில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளின் தனிப்பட்ட புகைப்படங்களை காப்பி செய்து வைத்துக்கொண்டு மிரட்டுவது சட்டப்படி தவறு என்றும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்ட துறைக்கு வேறு பேராசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

From around the web