எந்த அதிசயமும் தமிழகத்தில் நடக்காது: அமைச்சர் ஜெயகுமார் பதிலடி

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நீடித்து வரும் அதிசயம் நடப்பதுபோல் நாளையும் ஒரு அதிசயம் நடக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசினார். ரஜினி என்ன பேசினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அதிமுக தலைவர்கள் தமிழக முதல்வர் குறித்து பேசினால் சும்மா விடுவார்களா? முதல்வரில் இருந்து அமைச்சர்கள் வரை கடந்த இரண்டு நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் ஜெயகுமார் ரஜினிக்கு
 

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நீடித்து வரும் அதிசயம் நடப்பதுபோல் நாளையும் ஒரு அதிசயம் நடக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசினார்.

ரஜினி என்ன பேசினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அதிமுக தலைவர்கள் தமிழக முதல்வர் குறித்து பேசினால் சும்மா விடுவார்களா? முதல்வரில் இருந்து அமைச்சர்கள் வரை கடந்த இரண்டு நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயகுமார் ரஜினிக்கு பதிலடி தரும் வகையில், ‘ரஜினி சொல்லும் அதிசயம் நடக்க வாய்ப்பு இல்லை. மக்களுக்கு நல்லது செய்த பின்னர் பதவிக்கு வரவேண்டும். மற்றவர்கள் மீது கல்லெறிந்து பதவிக்கு வர நினைக்க கூடாது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பான அரசை விமர்சனம் செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்

அரசியலில் ஈடுபட அனைவருக்கும் ஆசை இருப்பது நியாயம் தான். அதேபோல் அரியணை ஏற ரஜினி கமல் விஜய் என யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதே நேரத்தில் எங்கள் மீது கல்லெறிந்தால் காயம் அவர்களுக்குத்தான்’ என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

From around the web