திடீரென பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறை: போராட்டம் காரணமா?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி இன்று கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாகவும், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கவில்லை என்றும் தகவல்கள் வெளிஅந்துள்ளது 996-ம் ஆண்டு தேனி மாவட்டம் வைகை அணையில் தென்மேற்குப் பகுதியில் இருந்து உபரிநீராக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து ஆண்டிப்பட்டி, வத்தலகுண்டு, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்களுக்கு கொண்டு செல்வதற்கு 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த
 

திடீரென பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறை: போராட்டம் காரணமா?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி இன்று கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாகவும், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கவில்லை என்றும் தகவல்கள் வெளிஅந்துள்ளது

996-ம் ஆண்டு தேனி மாவட்டம் வைகை அணையில் தென்மேற்குப் பகுதியில் இருந்து உபரிநீராக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து ஆண்டிப்பட்டி, வத்தலகுண்டு, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்களுக்கு கொண்டு செல்வதற்கு 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் தற்போது இந்த திட்டம் நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டுள்ளது

இருப்பினும் நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் கடந்த வருடம் இந்த திட்டம் முழுமை பெற்று தற்போது வைகை அணையில் இருந்து இந்தக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்நிலையில், வைகை அணையின் நீர் மட்டம் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அதிகரித்துள்ளதால், இந்த திட்டத்தின் கீழ் கால்வாய்களில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் போராட்டம் நடத்துவதாகவும் அந்த பகுதி மக்கள் அறிவித்தனர்.

இதன்படி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க நிரந்ததர அரசாணை வெளியிட வலியுறுத்தி விவசாய சங்கம் போராட்டம் அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதால் இன்று தேனி பகுதியில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுனர் சங்கம், மருந்து வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோக்கள், பெட்ரோல் பங்குகள் இயங்கவில்லை, திரையரங்குகளில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web