தென்மாவட்டங்களில் கனமழை: விடுமுறை அறிவிப்பு வெளிவருமா?

ஆறு தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து ஒருசில மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இருப்பினும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று மழைக்கான
 

தென்மாவட்டங்களில் கனமழை: விடுமுறை அறிவிப்பு வெளிவருமா?

ஆறு தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து ஒருசில மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இருப்பினும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று மழைக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்பதால் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web