சர்க்கரை அட்டை டு அரிசி அட்டை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்யலாம் என்றும், அவ்வாறு மாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து, நவம்பர் 26ஆம் தேதிக்குள் https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலோ அல்லது சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமோ சமர்ப்பிக்கலாம் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் இன்னும் பலர்
 

சர்க்கரை அட்டை டு அரிசி அட்டை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்யலாம் என்றும், அவ்வாறு மாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து, நவம்பர் 26ஆம் தேதிக்குள் https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலோ அல்லது சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமோ சமர்ப்பிக்கலாம் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் இன்னும் பலர் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பங்களை தந்து கொண்டிருப்பதால் இதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது

இதன்படி சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான அவகாசம் நவம்பர் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web