எஞ்சினியரை விட அதிகம் சம்பாதிக்கும் புரோட்டா மாஸ்டர்

நான்கு வருட இன்ஜினியரிங் படிப்பு, அதற்காக லட்சக்கணக்கில் செலவு, படித்து முடித்தபின் வேலை தேடுதல், வேலை கிடைத்தாலும் முதலில் குறைந்த சம்பளம், அதன்பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்று ஒரு என்ஜினியர் ஐம்பதாயிரம் சம்பளம் பெற குறைந்தது 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது ஆனால் புரோட்டா மாஸ்டர் பணிக்கு ஒரே ஒரு மாதம் மட்டும் பயிற்சி பெற்று, அடுத்த மாதமே ரூபாய் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது
 

எஞ்சினியரை விட அதிகம் சம்பாதிக்கும் புரோட்டா மாஸ்டர்

நான்கு வருட இன்ஜினியரிங் படிப்பு, அதற்காக லட்சக்கணக்கில் செலவு, படித்து முடித்தபின் வேலை தேடுதல், வேலை கிடைத்தாலும் முதலில் குறைந்த சம்பளம், அதன்பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்று ஒரு என்ஜினியர் ஐம்பதாயிரம் சம்பளம் பெற குறைந்தது 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது

ஆனால் புரோட்டா மாஸ்டர் பணிக்கு ஒரே ஒரு மாதம் மட்டும் பயிற்சி பெற்று, அடுத்த மாதமே ரூபாய் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது

மதுரையைச் சேர்ந்த ஒருவர் புரோட்டா பயிற்சி மையம் என்ற ஒரு மையத்தை ஆரம்பித்து இளைஞர்களுக்கு புரோட்டா செய்வது எப்படி என்ற பயிற்சியை அளித்து வருகிறார். ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று இவர் அளிக்கும் இந்த பயிற்சியில் சேர்ந்து பல இளைஞர்கள் தற்போது ஓட்டல்களில் புரோட்டா மாஸ்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்

அவர்கள் ரூபாய் 1000 முதல் 2000 வரையிலான தினச்சம்பளம் பெற்று வருவதாகவும், மாதம் மிக எளிதாக ரூபாய் 50 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது

எனவே என்ஜினியரிங் உள்பட பல படிப்புகள் இலட்சக்கணக்கில் செலவு செய்து படிப்பதைவிட ஆயிரம் ரூபாய் மட்டும் செலவு செய்து புரோட்டா மாஸ்டர் பயிற்சி பெற்று கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது

From around the web