சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: இன்று பள்ளி விடுமுறையா?

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் நேற்று இரவு விடிய விடிய நல்ல மழை பெய்தது சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் சென்னை மட்டுமின்றி கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து
 

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: இன்று பள்ளி விடுமுறையா?

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் நேற்று இரவு விடிய விடிய நல்ல மழை பெய்தது

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் சென்னை மட்டுமின்றி கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் விடுமுறை அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web