யார் தடுத்தாலும் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென உள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் திமுக நேற்று தாக்கல் செய்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்த விரும்பவில்லை என்பது தற்போது உண்மையாகி உள்ளதாகவும் யார் தடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்றும் இன்று செய்தியாளர்களை சந்தித்த
 

யார் தடுத்தாலும் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென உள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் திமுக நேற்று தாக்கல் செய்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்த விரும்பவில்லை என்பது தற்போது உண்மையாகி உள்ளதாகவும் யார் தடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்றும் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார்

மேலும் சீமான் நேற்று பேசியது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது ’கடல் எப்போது வற்றுவது, தூக்கு எப்போது கருவாடு தின்பது என்ற கதை போல் தான் சீமானின் பேச்சு உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

முன்னதாக நேற்று சீமான் ’தான் ஆட்சிக்கு வந்தால் தன் மீது வழக்கு போட்டவர்களை கொல்வேன் என்றும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டால் மட்டுமே வாழ்வீர்கள் அல்லது சாவீர்கள் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web