திடீரென மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த போலீஸ் படை: பெரும் பரபரப்பு

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சற்றுமுன் போலீஸ் படை ஒன்று புகுந்து கோவிலை இன்ச் இன்ச்சாக சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலின் இமெயிலுக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதனை கோவில் நிர்வாகிகள் ஓப்பன் செய்து படித்தபோது ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து உடனடியாக களத்தில்
 

திடீரென மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த போலீஸ் படை: பெரும் பரபரப்பு

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சற்றுமுன் போலீஸ் படை ஒன்று புகுந்து கோவிலை இன்ச் இன்ச்சாக சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலின் இமெயிலுக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதனை கோவில் நிர்வாகிகள் ஓப்பன் செய்து படித்தபோது ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து கோவில் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்தவித வெடிகுண்டுகளும் சிக்கவில்லை என்று போலீசாரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளதால் கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web