விடிய விடிய கொட்டித்தீர்ந்த மழை: போக்குவரத்து பாதிப்பு!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னையில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்ந்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி உடன் உள்ளனர் இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் கனமழை காரணமாக மழை நீர் அதிக அளவு தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரம் அடையும் என்றும் குறிப்பாக திருப்பூர் ஈரோடு கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது
 

விடிய விடிய கொட்டித்தீர்ந்த மழை: போக்குவரத்து பாதிப்பு!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னையில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்ந்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி உடன் உள்ளனர்

இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் கனமழை காரணமாக மழை நீர் அதிக அளவு தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரம் அடையும் என்றும் குறிப்பாக திருப்பூர் ஈரோடு கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி அருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் சேலம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web