உள்ளாட்சி தேர்தல்: நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் இல்லையா?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் இருந்த நிலையில் திடீரென கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் திமுக ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்றே பலர் கருத்து தெரிவித்தனர் இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. ஆனால் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தல் தேதியை அறிவிக்காமல் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்
 

உள்ளாட்சி தேர்தல்: நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் இல்லையா?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் இருந்த நிலையில் திடீரென கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் திமுக ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்றே பலர் கருத்து தெரிவித்தனர்

இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. ஆனால் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தல் தேதியை அறிவிக்காமல் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சற்றுமுன் அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி குறித்த விபரங்கள் இதோ

வேட்புமனு தாக்கல்: டிசம்பர் 6 முதல் டிசம்பர் 13 வரை
வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 16
வேட்புமனு வாபஸ் பெற கடைசி தினம்: டிசம்பர் 18
வாக்குப்பதிவு: டிசம்பர் 27 மற்றும் 30
வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 2

From around the web