உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக தயங்குவது ஏன்?

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக நடக்கும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என அதிமுக ஒருபுறமும், உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் முழு வெற்றி பெறுவோம் என்று திமுக தரப்பினரும் கூறி வருகின்றனர் ஆனால் இரு தரப்புமே தேர்தலை நடத்துவதில் விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் என்றாலே ஊராட்சி, ஒன்றியம், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என மொத்தமாக தான் தேர்தல் இதுவரை நடந்து
 
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக தயங்குவது ஏன்?

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக நடக்கும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என அதிமுக ஒருபுறமும், உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் முழு வெற்றி பெறுவோம் என்று திமுக தரப்பினரும் கூறி வருகின்றனர்

ஆனால் இரு தரப்புமே தேர்தலை நடத்துவதில் விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் என்றாலே ஊராட்சி, ஒன்றியம், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என மொத்தமாக தான் தேர்தல் இதுவரை நடந்து உள்ளது

ஆனால் தற்போது திடீரென நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரவில்லை. ஊராட்சி மன்றங்களுக்கு மட்டுமே தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் அதிமுக உள்ளாட்சித் தேர்தலை முழுமையாக சந்திக்க பின்வாங்குவதாக கருதப்படுகிறது

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்போம் என்று வீராவேசமாக கூறிய திமுக திடீரென நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று ஒரு காரணத்தைக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது

எனவே இரண்டு கட்சிகளின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்துக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் அந்த சிக்கலால் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்பிரச்சனை ஏற்படலாம் என்றும் இரு கட்சிகளுமே பயப்படுவதாக தெரிகிறது

எனவே 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னரே புதிய ஆட்சி அமைக்கும் கட்சியே உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்று கூறப்படுகிறது.

From around the web