புதிய உள்ளாட்சி தேர்தல் தேதி: தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறு வரையறை செய்யப்படாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்று திமுக தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பு இன்று சுப்ரீம் கோர்ட்டில் வெளியானது இந்த தீர்ப்பின் படி தொகுதி மறு வரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் அந்த 9 மாவட்டங்களில் மட்டும் தொகுதி மறு வரையறை செய்த பின்னர் நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது
 
புதிய உள்ளாட்சி தேர்தல் தேதி: தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறு வரையறை செய்யப்படாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்று திமுக தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பு இன்று சுப்ரீம் கோர்ட்டில் வெளியானது

இந்த தீர்ப்பின் படி தொகுதி மறு வரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் அந்த 9 மாவட்டங்களில் மட்டும் தொகுதி மறு வரையறை செய்த பின்னர் நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது

தொகுதி மறு வரையறை செய்யப்படும் வரை அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலை நடத்தக் கூடாது என்ற திமுகவின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை என்பது இந்த தீர்ப்பின் மூலம் தெரியவருகிறது

இதனை அடுத்து ஏற்கனவே டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்த மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையம் தற்போது இந்த தீர்ப்பை அடுத்து புதிய தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாகவும் புதிய தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் பேட்டியில் கூறியுள்ளார்

From around the web