தமிழகத்தில் மீண்டும் கனமழை வாய்ப்பு: விடுமுறை அளிக்கப்படுமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் குமரி கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக மீண்டும் தென் மாவட்டங்களில் கன மழையும் வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனை அடுத்து கன மழை பெய்தால் தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகள் பல நாட்கள் விடுமுறை
 
தமிழகத்தில் மீண்டும் கனமழை வாய்ப்பு: விடுமுறை அளிக்கப்படுமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் குமரி கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக மீண்டும் தென் மாவட்டங்களில் கன மழையும் வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து கன மழை பெய்தால் தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகள் பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அந்த விடுமுறையை சரிக்கட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க ஆலோசித்து வரும் நிலையில் மீண்டும் மழை குறித்த தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னையை பொருத்தவரை வானம் ஒருசில நேரங்களில் மேகமூட்டமாக இருந்தாலும் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது

From around the web