உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் காரசார விவாதம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகள் ஒன்றாக இணைத்து இன்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் ப சிதம்பரம் அவர்கள் இந்த வழக்கிற்காக வாதாடி வருகிறார். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும், புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யப்படாததால்
 
உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் காரசார விவாதம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகள் ஒன்றாக இணைத்து இன்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் ப சிதம்பரம் அவர்கள் இந்த வழக்கிற்காக வாதாடி வருகிறார். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும், புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யப்படாததால் உள்ளாட்சி பதவிகளில் எண்ணிக்கையைக் கூட மாநில தேர்தல் ஆணையர் கூற முடியவில்லை என்றும் சிதம்பரம் வாதாடினார்

இதற்கு தமிழக அரசின் தரப்பில் ’புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. திமுக தரப்பில் வாதம் செய்தபோது ’உள்ளாட்சி தேர்தல் வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை என்றும், அந்த பணி முடிக்கும் முன்னரே தேர்தலை அறிவிக்க இருப்பதாகவும் வாதம் செய்து வருகிறது

இந்த வாதம் இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web