திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது: பெரும் பரபரப்பு

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்திய குடியுரிமை சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் திமுக இளைஞரணி சார்பில் மசோதாவின் நகல் கிழிப்பு போராட்டம் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட திமுக இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி உள்பட அனைவரும்
 
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது: பெரும் பரபரப்பு

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்திய குடியுரிமை சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் திமுக இளைஞரணி சார்பில் மசோதாவின் நகல் கிழிப்பு போராட்டம் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட திமுக இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

முக ஸ்டாலின் அவர்கள் மிசாவுக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டது போல் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடி உதயநிதி கைது செய்யப்பட்டார் என்று நாளைய வரலாறு கூறும் என திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web